search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் சிக்கினர்"

    அருப்புக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடி- கருங்குளம் சாலையில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தனியார் நூற்பு மில் அருகே வந்தபோது 6 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். அப்போது 3 பேர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் மற்ற 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது 3 மிளகாய் தூள் பாக்கெட்டுகள், கத்தி மற்றும் 25 அடி நீள கயிறு இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 21), முருகேசன் (21), மண்டல மாணிக்கம் முருகன் என தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியவர்கள் திருச்சுழி அஜித் (24), ராமநாதபுரம் மணி வண்ணன் (24), முத்துப்பட்டி முத்தமிழ் செல்வம் (24) ஆகும். இவர்கள் வழிப்பறி அல்லது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்களா? என தீவிர விசாரணை நடக்கிறது.

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவிகளை கடத்திய வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது17), மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் காவியா (17). இவர்கள் 2 பேரும் வடமதுரை அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

    கடைசி தேர்வு எழுத சென்ற மாணவிகள் 2 பேரும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    வடமதுரை போலீசார் 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்து பார்த்த போது மாணவிகள் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. மேலும் சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் நாட்ராயன் என்பவரும், பிளஸ்-2 மாணவர் பாலமுருகன் என்பவரும் மாணவிகளை கடத்தி சென்றது தெரியவந்தது.

    போலீசார் உடனே ஐதராபாத்துக்கு விரைந்தனர். மாணவிகளையும், அவர்களை கடத்தி சென்ற வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுபடி மைனர் பெண்களை கடத்தியதாக 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×